நீண்ட நேரம் காத்திருந்த இஸ்லாமிய வாக்காளர்கள் - லத்தியால் அடித்தே வெளியேற்றிய போலீஸ் !
இஸ்லாமிய வாக்காளர்களை போலீஸார் லத்தியால் அடித்து வெளியேற்றும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாக்காளர்கள்
நடப்பாண்டின் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடக்கவிருக்கிறது. நாட்டின் அடுத்த அரசை முடிவு செய்யும் இந்த தேர்தல், ஏப்ரல் 19 மற்றும் ஏப்ரல் 26 ஆகிய நாட்களில் 2 கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இன்று 3-ஆம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகின்றது.
மொத்தம் 93 தொகுதிகளுக்கு குஜராத் - 25, மகாராஷ்டிரா - 11, உத்தரப் பிரதேசம் - 10, மத்தியப் பிரதேசம் - 9, சத்தீஸ்கர் - 7, பீகார் - 5, அசாம், மேற்கு வங்கம் - தலா 4, கோவா, தாத்ரா நாகர் ஹவேலி, டையூ டாமன் தலா 2 என வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில், சம்பல் தொகுதியில் இன்று ஏராளமான வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக கூடியிருந்தனர். அஸ்மாலி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளி வாக்களிக்கும் பூத் அமைக்கப்பட்டு இருந்தது. இன்று காலை முதலே ஏராளமான இஸ்லாமிய வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வந்தனர்.
போக்குவரத்திற்கு இடையூறாக இருந்தவர்களை கண்டித்த போக்குவரத்து பெண் காவலர் மீது தாக்குதல் - 6 பேர் கைது
போலீஸ்
இந்த நிலையில், மதியம் அங்கு வந்த 20-க்கும் மேற்பட்ட போலீஸார் வாக்களிப்பதற்காக, வாக்குச்சாவடி மையத்தில் காத்திருந்த மக்களை அங்கிருந்து லத்தியால் அடித்து வெளியேற்றியதாக சொல்லப்படுகிறது.
இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில், சம்பவ இடத்திற்கு சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர் ஜியா உர் ரஹ்மான் பர்க் விரைந்துள்ளார். அப்போது போலீஸார் வாக்குப்பதிவை சீர்குலைக்கும் வகையில் நடந்துகொண்டதாக கூறி போலீஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மேலும், தேர்தல் ஆணையம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதில் கட்சியினருக்கும் போலீஸாருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.வாக்காளர்களை, குறிப்பாக இஸ்லாமியர்களை வாக்களிக்க விடாமல் போலீஸார் தடுத்து வருவதாக உத்தரபிரதேசத்தில் குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியுள்ளது.