பெண்கள் முடியை புடித்து இழுத்து உதைத்த போலீஸ் அதிகாரி - வைரலாகும் வீடியோ!

Chhattisgarh
By Vinothini May 27, 2023 02:58 PM GMT
Report

 போலீசார் பெண்களின் முடியை புடித்து அடித்து உடைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் எதிர்ப்பு

சத்தீஸ்கர் மாநிலம், சூரஜ்பூர் மாவட்டத்தில் உள்ள தில்சிவா கிராமத்தில் சிலர் சட்ட விரோதமாக வீடுகளை கட்டி இருந்ததாக கூறப்படுகிறது.

police-pulls-womens-hair-and-attacks-brutally

அதனால் நேற்று வருவாய் துறை அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் அங்கு சென்று ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற முயன்றனர்.

தொடர்நது அங்கு வாழும் மக்கள் அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், அந்த மக்கள், "நாங்கள் இங்க பல வருடங்களாக வாழ்ந்து வருகிறோம், வீடுகளை இடிக்க விடமாட்டோம்" என்று கூறியுள்ளனர்.

இதனால் இவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

தாக்குதல்

இந்நிலையில், அவர்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றியதும் ஆத்திரம் அடைந்த பெண்கள் அதிகாரிகளை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் போலீசார் அந்த பெண்களை தாக்க தொங்கினார். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களின் தலைமுடியை பிடித்து இழுத்து காலால் அவர்களை எட்டி உதைத்தனர்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தொடர்ந்து, அங்கு உள்ள கர்பிணி பெண்களையும் அடித்ததாக கூறப்படுகிறது.

இவ்வாறு வருவாய் துறை அதிகாரிகளை தாக்கியதால் சில பெண்களை போலீஸ் வேனில் ஏற்றி காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.