வரதட்சணை கேட்டு கொடுமை - கர்ப்பிணியை தாக்கியதில் சிசுவுக்கு நேர்ந்த சோகம்!
வரதட்சணை கேட்டு கற்பிணியை தாக்கியதில் சிசு கலந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வரதட்சணை கொடுமை
மைசூரு நகர், சாமுன்டிமலை கிராமத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவருக்கு சசிகலா மற்றும் சந்தனா என்ற 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் சவுகார் உண்டி கிராமத்தை சேர்ந்த அண்ணன்-தம்பிகளான தர்மராஜ், வினோத்ராஜ் உடன் திருமணம் நடந்து முடிந்தது.
திருமணத்துக்கு முன்பு 2 மகள்களுக்கும் தலா 30 கிராம் நகையும், மாப்பிள்ளைகளுக்கு தலா 1 மோட்டார் சைக்கிளும் வரதட்சணையாக தருவதாக மோகன்ராஜ் தெரிவித்துள்ளார். இதனையடுத்து திருமணம் நடைபெற்றது. ஆனால், 2 மகள்களுக்கும் தலா 10 கிராம் நகை மட்டும் கொடுத்துள்ளார்.
நேர்ந்த சோகம்
இதை தொடர்ந்து, மீதமுள்ள 40 கிராம் நகை, மோட்டார் சைக்கிளை வாங்கி வரும்படி மாப்பிள்ளை வீட்டார், சசிகலா, சந்தனாவை அவ்வப்போது கொடுமை படுத்தியுள்ளனர். மேலும் அக்கா தங்கை இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். அதில், சந்தனா கர்ப்பிணியாக இருப்பது தெரிந்தும் அவர் மீதும் குடும்பத்தினர் தாக்குதல் நடத்தினர்,
இதனால் அவரது வயிற்றில் இருந்த கரு கலைந்தது. இந்த நிலையில்,அக்காள்- தங்கை இருவரும் தங்கள் வீட்டுக்கு சென்று, நடந்ததை கூறி கதறி அழுதுள்ளனர். இதை அறிந்த மோகன்ராஜ், அவரது மருமகன்களான தர்மராஜ், வினோத்ராஜ் மற்றும் அவர்களின் பெற்றோர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார், 4 பேர் மீது வரதட்சணை கொடுமை பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.