வரதட்சணை கொடுமை; மனைவியை கயிற்றால் கட்டி கணவர் செய்த காரியம் - கதறிய பெண்!

India Crime Madhya Pradesh
By Jiyath Sep 11, 2023 06:01 AM GMT
Report

மனைவியை கயிற்றால் கட்டி கிணற்றில் இறக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தகியுள்ளது. 

வரதட்சணை கொடுமை

மத்தியபிரதேச மாநிலம் நீமுச் மாவட்டம் கிர்புரா கிராமத்தை சேர்ந்தவர் ராகேஷ். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் ராகேஷுக்கும், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த உஷா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது.

வரதட்சணை கொடுமை; மனைவியை கயிற்றால் கட்டி கணவர் செய்த காரியம் - கதறிய பெண்! | Husband Hanged Wife In Well For Dowry I

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி ராகேஷ் தன் மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளார். அதற்காக தன் மனைவி உஷாவை கயிறு கட்டி இழுத்துச் சென்று தண்ணீர் நிறைந்த கிணற்றுக்குள் இறக்கியுள்ளார்.

மனைவி உஷா தன்னை மேலே தூக்கி விடுங்கள் என்று எவ்வளவு கெஞ்சி அழுதும், ராகேஷ் கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் கல் நெஞ்சத்துடன் இருந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தன் மனைவி கிணற்றுக்குள் இருக்கும் வீடியோவையும் பதிவு செய்து அவரது மைத்துனருக்கு அனுப்பியுள்ளார். மேலும் அவரிடம் 5 லட்ச ரூபாய் பணம் கேட்டுள்ளார்.

30 வயது பெண்ணை கரம் பிடித்த 60 வயது முதியவர்; பெண் வீட்டாருக்கு ஓகே - அதான் காரணமா?

30 வயது பெண்ணை கரம் பிடித்த 60 வயது முதியவர்; பெண் வீட்டாருக்கு ஓகே - அதான் காரணமா?

கணவர் கைது

இதனை பார்த்து அதிர்ச்த்தியடைந்த பெண்ணின் குடும்பத்தினர் ராகேஷுடன் சுமூக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மேலும், அந்த கிராமத்தில் இருக்கும் சிலரை தொடர்பு கொண்டு, தங்களது மகளை காப்பாற்றுமாறு கூறியுள்ளனர்.

வரதட்சணை கொடுமை; மனைவியை கயிற்றால் கட்டி கணவர் செய்த காரியம் - கதறிய பெண்! | Husband Hanged Wife In Well For Dowry I

அதன்பிறகு அந்த பெண் கிணற்றில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து தனது பெற்றோர் வீட்டுக்கு சென்ற பெண் உஷா, நடந்த கொடுமைகள் அனைத்தையும் கூறியுள்ளார்.

எனவே பெண் வீட்டார் ராகேஷுக்கு எதிராக போலீசில் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்த காவலர் கொடூர கணவன் ராகேஷை கைது செய்துள்ளனர்.