வீதியில் உலா வந்த 8 அடி நீள முதலை..மிரண்டுபோன வாகன ஓட்டிகள் - வைரலாகும் வீடியோ!

Viral Video India Maharashtra
By Swetha Jul 01, 2024 03:30 PM GMT
Report

முதலை ஒன்று சாலையில் வந்ததை கண்டு வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர்.

8 அடி முதலை

மகாராஷ்டிர மாநிலம், ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள சிப்லுன் கிராமத்தின் சாலையின் குறுக்கில் பெரிய முதலை ஒன்று சாதாரணமாக உலாவி கொண்டு இருந்தது. திடீரென சாலையில் முதலையை பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து தங்களது வாகனங்களை நிறுத்தினர்.

வீதியில் உலா வந்த 8 அடி நீள முதலை..மிரண்டுபோன வாகன ஓட்டிகள் - வைரலாகும் வீடியோ! | A Crocodile Found On Road Amid Heavy Traffic

இதனால் அந்த வழியே சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், 8 அடி நீளமுள்ள முதலையை கண்டவர்கள் அச்சமடைந்தனர். இந்த நிலையில், காரில் சென்ற வாகன ஓட்டி ஒருவர் முதலை சாலையில் நடமாடுவதை பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

பசிவெறியோடு சாலையில் நடந்து வந்த ராட்சத முதலை - நெஞ்சை பதற வைக்கும் காட்சி

பசிவெறியோடு சாலையில் நடந்து வந்த ராட்சத முதலை - நெஞ்சை பதற வைக்கும் காட்சி

வைரலாகும் வீடியோ!

ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள நீர் நிலைகளில் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.

அதுமட்டுமின்றி அந்த மாவட்டம் முதலைகளுக்கு பெயர் போனது. எனவே கிராமத்தில், பல முதலைகளின் இருப்பிடமான, சிவன் ஆற்றிலிருந்து இந்த முதலை வெளியே வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.