ரூ.6000 இல்லை; 9 ஆயிரமாம்..இன்னும் 15 நாள்தான் - பெண்களுக்கு அசத்தல் தகவல்!
9 ஆயிரம் ரூபாய் வரை மக்கள் அரசிடம் பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகளிர் உரிமைத்தொகை
தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ். முகாம்களில் விண்ணப்பித்து கள ஆய்வு நிலுவையில் இருந்த விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து, பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த மாதம் 15ம் தேதி ரூபாய் 1000 வழங்கப்பட உள்ளது.
முக்கிய தகவல்
அடுத்த மாதம் பொங்கல் காரணமாக 15ம் தேதிக்கு முன்பாக ஜனவரி முதல் வாரமாக அந்த மாதத்திற்கான ரூபாய் 1000 வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், கரும்பு, வெல்லத்திற்கு பதிலாக பணமாக பரிசுத்தொகை வழங்கப்படும். இந்த பரிசுத்தொகை இந்த வருடமும் ரேஷன் கடைகளில் வழங்கப்பட உள்ளது.
இதற்காக 1000 ரூபாய் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரூபாய் 3000 மக்களுக்கு அடுத்த 4 வாரங்களில் வழங்கப்பட உள்ளது.
இதற்கிடையில், சென்னை, திருவள்ளூர் மக்களுக்கு கூடுதலாக 6000 ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.