தொண்டை வலியை விட இதுதான் முக்கியம்; மகளிர் உரிமைத் தொகை - மு.க.ஸ்டாலின் முக்கிய தகவல்!
மகளிர் உரிமைத் தொகை இரண்டாம் கட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்.
மகளிர் உரிமைத் தொகை
குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத் தலைவிகள் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் உதவி தொகை கிடைக்காத 11,85,000 ஆயிரம் பேர் மேல்முறையீடு செய்தனர்.
2ம் கட்டம்
இவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியானவர்களுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை கலைவாணர் அரங்கில் முதலமைசர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், கடந்த சில நாட்களாக காய்ச்சல் மற்றும் தொண்டை வலி இருந்தது.
காய்ச்சல் போனாலும் தொண்டை வலி உள்ளது. இந்த வாரம் முழுவதும் மருத்துவர்கள் ஓய்வெடுக்க சொன்னாலும், உங்களை சந்திக்காமல் என்னால் இருக்க முடியவில்லை. மகளிர் உரிமைத்தொகை நிறைவேற்ற முடியாத வாக்குறுதி என சிலர் விமர்சித்தனர்.
மகளிர் உரிமைத்தொகை திட்டம் இந்தியாவுக்கே முன்மாதிரியாக உள்ளது.
நவம்பர் மாதத்திற்காக கலைஞர் உரிமைத்தொகை இன்று மாலைக்குள் வரவு வைக்கப்படும் . பலர் முடியாது என்று கூறிய திட்டத்தை இன்று வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறோம் என்றார்.