உருவாகும் புயல்; அடுத்த 24 மணி நேரத்தில்.. சென்னைக்கும் எச்சரிக்கை!
புயல் காரணமாக பாம்பனில் 1ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம்
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை ஒடிசா, ஆந்திரா கடலோரத்தில் இருந்து வட மேற்கு மற்றும் மேற்கு பகுதியில் மையம் கொண்டுள்ளது.
இதனால் தமிழக கடலோரத்தில் சூறாவளிக் காற்று வீசி ராட்சத அலைகள் எழக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, பாம்பன் துறைமுகம் அலுவலகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
புயல் எச்சரிக்கை
மேலும், சென்னை, தூத்துக்குடி, கடலூர், பாம்பன், நாகப்பட்டினம், காரைக்கால், எண்ணூர், புதுச்சேரி, காட்டுப்பள்ளி ஆகிய 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்ற வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய தென்தமிழக கடலோரப் பகுதிகளில் இன்றும், நாளையும் மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.