பூமியை தாக்கும் சக்திவாய்ந்த சூரிய புயல் -இதனால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் தெரியுமா?
சக்தி வாய்ந்த சூரிய புயல் பூமியை தாக்கி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சூரிய புயல்
11 வருடத்திற்கு ஒருமுறை சூரியனின் சக்தியானது அதிகரித்துக் காணப்படும். அதாவது சூரியனிலிருந்து வரும் வெப்ப கதிர்களின் (காந்தப்புயல், சூரிய புயல், மின்காந்தபுயல்) தாக்கமானது மிகவும் வலுவாக இருக்கும்.
பொதுவாக இந்த சூரிய காந்தப் புயல் காரணமாக பூமியில் செயல்பாட்டில் இருக்கும் பல்வேறு அதிர்வெண் வரிசைகளில் இடையூறு நிகழ்த்தவும்கூடும்.இதனால் விமானங்கள், கப்பல் போக்குவரத்து, ஜிபிஎஸ் மற்றும் செயற்கைக்கோள் தொலைத்தொடர்பு உள்ளிட்டவை பாதிப்புக்கு ஆளாகும்.

இன்று பூமியை சூரியப் புயல் தாக்க வாய்ப்பு - பூமிக்கு என்ன பாதிப்பு? - நாசா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
பாதிப்புகள்
இந்த காந்தப் புயல் காரணமாக வடக்கு அல்லது தெற்கு திசைகளில், வான்வெளி வெளிச்சங்களின் கலவையிலான தோரணங்கள் கண்களுக்கு விருந்தாகும். சூரிய புயலால் துருவ பகுதியில் இருக்கும் கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் ஏற்பட்ட அரோரா எனப்படும் ஒலிக்கிச்சுகளின் நிகழும்.
தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின், விண்வெளி வானிலை முன்னறிவிப்பு மையம் 2003-ம் ஆண்டிலிருந்து மிகவும் சக்தி வாய்ந்ததாக கணித்திருக்கும் இந்த வான்வெளிக் காட்சியானது இங்கிலாந்து மக்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.