நள்ளிரவில் நடந்த கோர விபத்து.. லாரி மீது மோதிய பஸ் - 9 பேர் உடல் சிதறி பலி!
மத்தியப் பிரதேச மாநிலத்தில் நள்ளிரவில் இந்த இக்கோர விபத்து நிகழ்ந்துள்ளது.
மத்தியப் பிரதேசம்
சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் பயணிகள் 9பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்திலிருந்து மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் நோக்கி, கடந்த சனிக்கிழமை இரவு (செப்.28) 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு பேருந்து ஒன்று வந்துள்ளது .
மத்தியப் பிரதேச மாநிலம், மைஹர் மாவட்ட எல்லைக்குட்ட பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து அதிக வேகமாக ஓட தொடங்கியது.அப்போது, சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரியில் வேகமாக மோதியது.
கோர விபத்து
இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த பயணிகள் 20 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது .
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் படுகாயம் அடைந்த பயணிகளை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த பயணிகள் 20 பேரில் 9 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.மேலும் சிகிச்சை பெற்றுவருபவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.