பென்சன் பணத்தை பெற 2 கிமீ தவழ்ந்து சென்ற மூதாட்டி - நெஞ்சை உலுக்கிய சம்பவம்!
பென்சன் பணத்தை பெற 2 கிமீ மூதாட்டி ஒருவர் தவழ்ந்தே சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிகாரி அலட்சியம்
ஒடிசா, ரைசுவான் கிராமத்தைச் சேர்ந்தவர் பதூரி(80). மூத்த குடிமக்களுக்கான அரசு ஓய்வூதியம் பெற்று வருகிறார். இவரை பஞ்சாயத்து அலுவலகத்துக்கு வந்து பென்ஷன் பணத்தை வாங்கிக்கொள்ளும்படி பஞ்சாயத்து அதிகாரி கூறியுள்ளார்.
வறுமையில் உள்ள மூதாட்டி அன்றாட தேவைகளுக்கு பென்ஷன் பணத்தையே நம்பியுள்ளார். எனவே, தனது வீட்டில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்துக்கு நடக்க முடியாமல் தவழ்ந்தே சென்று பென்ஷன் பணத்தை வாங்கியுள்ளார்.
மூதாட்டி வேதனை
இதுதொடர்பான வீடியோ வெளியாகி கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து பஞ்சாயத்து செயல் அலுவலர், மூதாட்டி நிலை குறித்து அறியவில்லை.
#Watch | 80-year-old woman crawls for nearly 2 km to panchayat office in Telkoi block of Odisha's Keonjhar to collect her old-age pension.#Video #Odisha #ViralVideo #pension pic.twitter.com/L00KfvHoMA
— TIMES NOW (@TimesNow) September 24, 2024
அடுத்த மாதத்தில் இருந்து மூதாட்டி பதூரியின் வீட்டுக்கே சென்று பென்ஷன் பணத்தை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
வீடியோவால் சர்சை வெடித்த நிலையில் மூதாட்டிக்கு வீட்டுக்கே சென்று இனி பென்ஷன் பணத்தை வழங்க அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.