பற்றி எரிந்த பேருந்து - பயங்கர விபத்தில் 8 பக்தர்கள் உடல் கருகி உயிரிழப்பு!
பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
புனித யாத்திரை
ஹரியாணா, சண்டிகர் பகுதியில் இருந்து பேருந்து ஒன்று உத்தரப் பிரதேசம், மதுராவிற்கு புனித யாத்திரைக்கு சென்று கொண்டிருந்தது. இதில், 64 பேர் பயணம் செய்தனர்.
அங்கு தரிசனத்தை முடித்துக் கொண்டு சொந்த ஊர் திரும்பி கொண்டு இருந்தனர். அப்போது, நூ அருகே வந்தபோது திடீரென பேருந்தின் பின்பகுதியில் தீ பிடித்துள்ளது.
8 பேர் பலி
இதனால், உடனே பேருந்தில் இருந்தவர்கள், இறங்க முயற்சி செய்துள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தகவலறிந்து தீயணைப்புத் துறையினர் வருவதற்கு முன்பே, பேருந்து முற்றிலும் எரிந்துவிட்டது.
VIDEO | At least eight people were killed when the bus they were travelling in caught fire on the Kundli-Manesar-Palwal (KMP) Expressway near Nuh, #Haryana, late on Friday.
— Press Trust of India (@PTI_News) May 18, 2024
(Source: Third Party) pic.twitter.com/xeE7XkhBGD
இந்த பயங்கர தீ விபத்தில் பேருந்தில் இருந்த 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். சுமார் 25 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ள நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது, போலீஸார் வழக்குப்பதிவு செய்து விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.