தீ விபத்தில் சிக்கிய புதுமண தம்பதி - உடல் கருகி 4 பேர் பலியான சோகம்!
கார் தீ பிடித்து விபத்திற்கு உள்ளானதில் புதுமண தம்பதி உட்பட 4 பேர் உடல் கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
போபால்
மத்தியபிரதேச மாநிலம், ஹர்டா மாவட்டம் வர்கலா சர்ஹிடா கிராமத்தை சேர்ந்தவர்கள் இந்த புதுமண தம்பதி.
இவர்கள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் நேற்று இரவு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சிஹொரா பகுதிக்கு சென்றுள்ளனர்.
விழா முடிந்ததும் காரில் திரும்பி வந்து கொண்டிருந்தனர் அப்பொழுது பொர்ஹர்னி பகுதியில் திடீரென கார் மோதி விபத்திற்குள்ளானது.
பலி
தொடர்ந்து, இச்சம்பவம் அதிகாலையில் எதிர்பாராத விதமாக கார் ஒரு மரத்தில் மோதி விபத்தானது.
பின்னர் தீ பற்றி எரிந்தது. இதனால் காரில் இருந்து யாராலும் வெளியே வரு முடியாவில்லை.
இந்த சம்பவத்தில் காரில் இருந்த புதுமண தம்பதி உள்பட 4 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.