மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய.. 7 ஆம் வகுப்பு மாணவர் கொடூர செயல் -அதிரவைத்த சம்பவம்!
பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய சக மாணவர் ஆள் செட் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பள்ளி மாணவி
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் செபாஸ்டின் ஆங்கில வழி தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படித்து வரும் 7 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் மதிப்பெண் குறைவாக பெற்றதாகத் தெரிகிறது.இதனால் தனது ரிப்ரோட் கார்டில் திருட்டுத்தனமாகப் பெற்றோரின் கையெழுத்தைப் போட்டுள்ளார்.
இதனை அதே வகுப்பில் படிக்கும் சிறுமி ஒருவர் பார்த்து ஆசிரியையிடம் தெரிவித்துள்ளார்.இதனால் 7 ஆம் வகுப்பு மாணவர் ஆத்திரமடைந்துள்ளார். இதனையடுத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யச் சொல்லி 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவனிடம் 100 ரூபாய் கட்டணமாக கொடுத்துள்ளான்.
பாலியல் வன்கொடுமை
இந்த சம்பவத்தை மூத்த மாணவன் இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் கூறியுள்ளார். மேலும் இந்த விஷயம் அறிந்த சிறுமியின் பெற்றோர்கள் பல முறை இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப் பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர். ஆனால் இதைப் பள்ளி நிர்வாகம் மூடி மறைக்க முயன்றுள்ளது.
இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் நீதிச் சட்டம் பிரிவு 75 உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விஷயத்தை மறைக்க முயன்ற பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் 2 ஆசிரியர்களைக் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.