சிறுவனை உருகி உருகி காதலித்த இளம்பெண்..கடைசியில் நடந்த டிவிஸ்ட்- பகீர் பின்னணி!
பிளஸ்-1 சிறுவனை இளம்பெண் ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
சிறுவன்
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் கேட்டரிங் சர்வீஸ் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், திருமண விழாவில் ஈரோட்டைச் சேர்ந்த 17 வயது சிறுவனை சந்தித்துள்ளார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து இருவரும் தொலைப்பேசியில் பேசி வந்துள்ளனர். இந்த பழக்கம் ஒருகட்டத்தில் காதலாக மாறியுள்ளது. இந்த சம்பவம் சிறுவனின் வீட்டிற்குத் தெரிய வந்ததால் அதிர்ச்சியடைந்தனர்.மேலும் இது குறித்துக் கண்டித்துள்ளனர்.
இளம்பெண்
இதனையடுத்து,கடந்த ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி வீட்டை விட்டு வெளியேறி 2 பேரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.இதற்கிடையே, 17 வயது சிறுவனைக் காணவில்லை என அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இளம்பெண்ணும், சிறுவனும் ஈரோட்டில் கணவன், மனைவியாக குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது.இதனையடுத்து இளம்பெண் மீது, குழந்தை திருமணத் தடை சட்டம் மற்றும் போக்சோ ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.