77வது சுதந்திர தினமா? 78 வதா? இந்தியாவிற்கு மட்டுமல்ல இந்த 5 நாடுகளுக்கும் சுதந்திர தினம் தான்!
சுதந்திர தினம் குறித்து அறிந்திடாத தகவல்களைப் பார்ப்போம்.
சுதந்திர தினம்
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ம் தேதி நாம் சுதந்திர தினத்தைக் கொண்டாடி வருகிறோம். 77ஆவது சுதந்திர தினமா அல்லது 78வது சுதந்திர தினமா என்ற கேள்வி பலருக்கும் எழாமல் இல்லை.
இந்தியா சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து கணக்கிட்டுப் பார்த்தால் இது நாம் சுதந்திரம் பெற்று 78 ஆண்டுகள் ஆகிவிட்டதைக் குறிக்கும்.
77-78?
அதேநேரம் 1948ல் இருந்து கணக்கிட்டால் அது 77வது சுதந்திர தினம். இந்தாண்டு அரசு தரப்பில் வெளியாகும் அனைத்து செய்திக்குறிப்புகளிலும் கூட 78ஆவது சுதந்திர தினம் என்றே கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவைப் போலவே வட கொரியா, தென் கொரியா, பஹ்ரைன், காங்கோ குடியரசு, லிச்சென்ஸ்டைன் ஆகிய நாடுகளும் ஆகஸ்ட் 15ம் தேதியைச் சுதந்திர தினமாகக் கொண்டாடுகிறது.