76வது சுதந்திர தினம்: இந்தியா விலை மதிப்பில்லா திறமையை கொண்டுள்ளது - பிரதமர் மோடி

Independence Day Narendra Modi Delhi India
By Sumathi Aug 15, 2022 04:01 AM GMT
Report

தன்னகத்தே விலை மதிப்பில்லா திறமையை கொண்டுள்ளது என இந்தியா நிரூபித்துள்ளது என பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார்.

பிரதமர் மோடி

நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த நிலையில், நாடு முழுவதும் ஓராண்டுக்கு சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபடுவது என மத்திய அரசு முடிவு செய்தது. இதன்படி, இந்த சூழலில், இந்தியாவின் 76-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமுடன் கொண்டாடப்படுகிறது.

76வது சுதந்திர தினம்: இந்தியா விலை மதிப்பில்லா திறமையை கொண்டுள்ளது - பிரதமர் மோடி | 76Th Independence Day Pm Modi Speech

இதனை முன்னிட்டு, தேசியக்கொடி வண்ணத்திலான தலைப்பாகை அணிந்து வந்திருந்த பிரதமர் மோடி டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு சென்று மலர்களை தூவி மரியாதை செலுத்தினார்.

சுதந்திர தின உரை

அதன்பின், டெல்லி செங்கோட்டைக்கு தேசியக்கொடி ஏற்ற புறப்பட்டார். இதனை தொடர்ந்து, பலத்த பாதுகாப்புடன், டெல்லி செங்கோட்டையில் இந்திய சுதந்திர தின கொண்டாட்டங்கள் தொடங்கி நடந்து வருகின்றன.

76வது சுதந்திர தினம்: இந்தியா விலை மதிப்பில்லா திறமையை கொண்டுள்ளது - பிரதமர் மோடி | 76Th Independence Day Pm Modi Speech

இதன்படி, பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து அதற்கு வணக்கம் செலுத்தினார். இதனையொட்டி வானில் ஹெலிகாப்டர்கள் பூக்களை தூவியபடி சென்றன. இதன்பின்னர், பிரதமர் மோடி சுதந்திர தின உரையாற்றினார்.

 மூவர்ணக்கொடிக்கு மரியாதை

அவர் பேசும்போது, உலகின் ஒவ்வொரு பகுதியிலும் நமது மூவர்ணக்கொடி பெருமை மற்றும் மரியாதையுடன் பறக்கிறது. இந்த சுதந்திர தினத்தில் ஒவ்வொரு இந்தியரையும், இந்தியாவை விரும்புபவர்களையும் நான் வாழ்த்துகிறேன்.

புதிய தீர்மானத்துடன் புதிய திசையை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாள் இது. சுதந்திர போராட்டத்தின்போது, நமது சுதந்திரபோராட்ட வீரர்கள் கொடூரம் மற்றும் கொடுமைகளை சந்திக்காத ஆண்டுகளே இல்லை.

நன்றிக்கடன்

சுதந்திரபோராட்ட வீரர்களுக்கு நாம் நமது மரியாதையை செலுத்தும் நாள் இன்று, நாம் அவர்களின் நோக்கத்தையும், இந்தியாவிற்கான அவர்களின் கனவையும் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

பிரிட்டிஷ் சாம்ராஜியத்தின் அடித்தளத்தை அசைத்த காந்திஜி, பகத்சிங், ராஜ்குரு, ராம்பிரசாத் பிஸ்மில், ராணி லட்சுமி பாய், சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் அனைத்து விடுதலை போராட்ட வீரர்களுக்கும் நமது நாடு நன்றிக்கடன்பட்டுள்ளது' என்றார்.

தலைவணங்க வேண்டிய தினம்

சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவின்போது, நம்முடைய தேசத்தின் பல்வேறு நாயகர்களை நாம் நினைவுகூர்ந்தோம். ஆகஸ்டு 14-ந்தேதி பிரிவினையின் பயங்கரங்களை நாம் நினைவுகூர்ந்தோம்.

இன்றைய நாள், கடந்த 75 ஆண்டுகளாக நமது நாட்டை முன்னோக்கி எடுத்து செல்ல பங்காற்றிய நாட்டின் அனைத்து குடிமக்களையும் நினைவுகூர வேண்டிய நாள். நாட்டு விடுதலைக்காக போராடிய அல்லது தேச கட்டமைப்பு பணியில் ஈடுபட்டவர்களான

டாக்டர் ராஜேந்திர பிரசாத், நேருஜி, சர்தார் பட்டேல், எஸ்.பி. முகர்ஜி, லால் பகதூர் சாஸ்த்ரி, தீன்தயாள் உபாத்யாய், ஜே.பி. நாராயண், ராம் மனோகர் லோகியா, வினோபா பாவே, நானாஜி தேஷ்முக், சுப்ரமணிய பாரதி போன்ற பெருந்தகையாளர்களின் முன் தலைவணங்க வேண்டிய தினம் இன்று.

இந்தியா ஜனநாயகத்தின் தாயகம். தனது 75 ஆண்டுகால பயணத்தில் பல சவால்களை சந்தித்ததுடன், தன்னகத்தே விலை மதிப்பில்லா திறமையை கொண்டுள்ளது என இந்தியா நிரூபித்து உள்ளது என பேசியுள்ளார்.