செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி

Narendra Modi Delhi
By Thahir Aug 15, 2022 03:29 AM GMT
Report

75ஆவது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி மூவண்ண கொடியை ஏற்றி வைத்தார் .

செங்கோட்டையில் கொடி ஏற்றினார் பிரதமர் 

இந்தியாவின் 75ஆவது சுதந்திர தின திருநாள் அமுதப்பெருவிழாவாக நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று 13ஆம் தேதி முதல் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்றினர்.

செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி | The Pm Hoisted The National Flag At Red Fort

சுதந்திர தினத்தையொட்டி இன்று காலை மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட்டுக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு மரியாதை செலுத்தினார்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு செங்கோட்டை வந்தடைந்தார். முப்படை வீரர்கள், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் உயர் அதிகாரிகள் பிரதமரை வரவேற்றனர்.

அதை தொடர்ந்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுகொண்டார். இதையடுத்து இந்தியாவின் பிரதமராக 9ஆவது முறையாக செங்கோட்டையில் தேசிய கொடியை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றி வைத்தார்.

சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்ற இவ்விழாவை முன்னிட்டு, செங்கோட்டையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. எனவே செங்கோட்டை பகுதியில் உள்ள கடைகளுக்கு சீல் வைத்து 400 சிசிடிவி கேமராக்கள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும், செங்கோட்டையை சுற்றி 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு ட்ரோன் வானில் பறக்கவும் தடை விதிக்கப்பட்டது.