இதை கவனிச்சீங்களா.. குழந்தையாக மாறிய பிரதமர் மோடி - கேரளாவில் நடந்த சுவாரஸ்யம்!
3 வயது சிறுமி பிரதமருடன் கண்ணங்களை கிள்ளியும்,தோலில் சாய்ந்து கொண்டு விளையாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வயநாடு
கேரளாவில் கடந்த 30 ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவால் வயநாடு ,சூரல்மலை, முண்டக்கை, பூஞ்சிரித்தோடு,அட்டமலை ஆகிய கிராமங்கள் மண்ணில் புதைந்தது . இந்த நிலச்சரிவில் சிக்கி 413 பேர் இதுவரை பலியாகியுள்ள நிலையில் 1200க்கும் மேற்பட்டவர்கள் படுங்காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சுமார் 130 பேர் இன்னும் காணாமல் போயுள்ள நிலையில் அவர்களின் நிலை என்ன என்று இதுவரை தெரியவில்லை. தொடர்ந்து ஒரு வாரத்துக்கு மேலாக மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. அப்பொழுது உயிரிழந்தவர்களின் சடலங்கள் கை ,கால் எனஒரு சில பகுதிகள் கிடைத்தது ஒட்டு மொத்த கேரள மக்களிடையே அதிரவைத்தது.
பிரதமர் மோடி
இந்தநிலையில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி கேரளா சென்று பார்வையிட்டார். தொடர்ந்து வயநாட்டில் மீட்புப் பணிகள் குறித்து மீட்புப் படையினரிடம் பிரதமர் மோடி கேட்டு அறிந்து கொள்கிறார்.
பின்னர், நிலச்சரிவில் சிக்கி மீட்கப்பட்டவர்கள் தங்கியிருக்கும் முகாமுக்கும், சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கும் பிரதமர் மோடி நேரில் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.அப்போது 3 வயது சிறுமி பிரதமருடன் கண்ணங்களை கிள்ளியும், தோலில் சாய்ந்து கொண்டு விளையாடியது.
மேலும் தனது மழலை மொழியில் 3 வயது சிறுமி பேச பிரதமர் மோடி அதனை கண்டு ரசித்தார். இது தொடர்பான வீடியோ இணையாயத்தில் வைரலாகி வருகிறது.