வளர்ப்பு மகளுடன் திருமணம் - மனைவிக்கு விஷம் கொடுத்த 71 வயது தந்தை!

Attempted Murder United States of America Crime
By Sumathi Aug 30, 2024 12:30 PM GMT
Report

வளர்ப்பு மகளைத் திருமணம் செய்ய, தந்தை மனைவிக்கு விஷம் கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகளுடன் திருமணம்

அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஆல்ஃபிரட் டபிள்யூ ரூஃப்(71). இவரது மனைவிக்கு 2021ல் தொடர்ச்சியாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் நடந்த சோதனையில் அவரது உடலில் போதைப்பொருள் இருந்தது தெரிய வந்தது.

வளர்ப்பு மகளுடன் திருமணம் - மனைவிக்கு விஷம் கொடுத்த 71 வயது தந்தை! | 71 Year Old Marry His Step Daughter America

ஆனால், அந்த பெண் தான் போதைப் பொருளைப் பயன்படுத்தவில்லை எனத் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், ரூஃப் தனது மனைவியிடம் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.

12 வயது மகளை கர்ப்பமாக்கிய தந்தை; கதறிய தாய் - கொடூர சம்பவம்!

12 வயது மகளை கர்ப்பமாக்கிய தந்தை; கதறிய தாய் - கொடூர சம்பவம்!

தந்தை கொடூரம்

வளர்ப்பு மகளைத் திருமணம் செய்து கொள்ளவே விஷம் கொடுத்ததாக கூறியுள்ளார். இதைக் கேட்டதும் அந்த பெண் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில், கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். தனது மனைவிக்கு முந்தைய திருமணத்தில் பிறந்த மகள் ஒருவர் இருக்கிறார்.

வளர்ப்பு மகளுடன் திருமணம் - மனைவிக்கு விஷம் கொடுத்த 71 வயது தந்தை! | 71 Year Old Marry His Step Daughter America

அவருடன் ரூஃப் பாலியல் உறவில் இருந்துள்ளார். . மனைவிக்கு போதை மருந்து கொடுக்கும் போதெல்லாம் மூவரும் நெருக்கமாக இருந்துள்ளனர். ஒருகட்டத்தில், வளர்ப்பு மகளையே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, தனது மனைவி இதற்குத் தடையாக இருப்பார் என யோசித்து கொலை செய்ய முடிவெடுத்துள்ளனர்.

மனைவி இறந்து விட்டால் இன்சூரன்ஸ் தொகையும் கிடைக்கும் என்பதால் இருவரும் சேர்ந்து பிளான் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.