12 வயது மகளை கர்ப்பமாக்கிய தந்தை; கதறிய தாய் - கொடூர சம்பவம்!
வளர்ப்பு தந்தையே, மகளை கர்ப்பமாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
ஓசூர் பகுதியை சேர்ந்தவர் 12 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். அவரது தந்தை இறந்துவிட்டார். இதனால், அவரது தாய் 29 வயது கம்பி கட்டும் தொழிலாளி ஒருவரை திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில் சிறுமி வயிறு வலியால் துடித்துள்ளார். அதனையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்ததில் அவர் 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
சிறுமி கர்ப்பம்
தொடர்ந்து இதுகுறித்து சிறுமியிடம் விசாரிக்கையில், அவரது வளர்ப்பு தந்தை பாலியல் வன்கொடுமையால் கர்ப்பமடைந்ததாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தாய் போலீஸில் புகாரளித்துள்ளார்.
அதன் அடிப்படையில், அவர் மீது போக்சோவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.