ஒரே கல்லூரியை சேர்ந்த 7 பேருக்கு எலிக்காய்ச்சல் - பின்னணி என்ன?

Cold Fever Tirunelveli
By Sumathi Oct 10, 2025 07:37 AM GMT
Report

ஒரே கல்லூரியை சேர்ந்த 7 பேருக்கு எலிக்காய்ச்சல் பாதித்துள்ளது.

எலிக்காய்ச்சல்

நெல்லை, திடியூரில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

nellai

இந்நிலையில், கல்லூரியில் சில மாணவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனையடுத்து கல்லூரி மாணவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அண்ணன் ஸ்தானத்தில் இருப்பேன் - வீடியோ காலில் பேசிய விஜய்!

அண்ணன் ஸ்தானத்தில் இருப்பேன் - வீடியோ காலில் பேசிய விஜய்!

7 பேர் பாதிப்பு 

அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், எலிக்காய்ச்சலுக்கான அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து கல்லூரியின் விடுதி வளாகத்தில் சுகாதாரத்துறையினர் சோதனை நடத்தினர்.

rat fever

அதில் சுகாதாரமில்லாத தண்ணீர் பயன்பாட்டால் மாணவர்கள் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இந்நிலையில், சுகாதாரமான வசதிகளை ஏற்படுத்தும் வரை கல்லூரியை மூடுவதற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் கல்லூரி வளாகத்தில் உள்ள 2 உணவகங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.