அண்ணன் ஸ்தானத்தில் இருப்பேன் - வீடியோ காலில் பேசிய விஜய்!
Vijay
Karur
Thamizhaga Vetri Kazhagam
By Sumathi
விஜய் கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் வீடியோ காலில் பேசியுள்ளார்.
பிரச்சார கூட்டம்
கரூர், பிரச்சார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் வீடியோகாலில் தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார்.
கூட்ட நெரிசலில் பலியான தனுஷ்குமாரின் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்த விஜய், உயிரிழந்தவரின் தங்கையிடம் அண்ணன் ஸ்தானத்தில் இருப்பேன்.
விஜய் ஆறுதல்
நடக்கக்கூடாதது நடந்து விட்டது, எந்த வகையிலும் ஈடு செய்ய முடியாத இழப்பு என்று கூறியுள்ளார். சுமார் 15 முதல் 20 நிமிடம் வரை விஜய் பேசி ஆறுதல் கூறியுள்ளார்.
வீடியோகாலில் பேசியபோது புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க வேண்டாம் என விஜய் வேண்டுகோள் விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.