தாண்டவமாடும் டெங்கு - 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

Cold Fever Tamil nadu
By Sumathi Oct 07, 2025 02:30 PM GMT
Report

மூன்று மாவட்டத்திற்கு சிவப்பு நிற எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

டெங்கு தொற்று

கடந்த இரண்டு மூன்று வார காலமாக டெங்கு தொற்று எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னை, திருவள்ளூர் மற்றும் கோவை ஆகிய மூன்று மாவட்டத்திற்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

dengue fever

கடந்த ஜனவரி மாதம் முதல் கடந்த அக்டோபர் மூன்றாம் தேதி முதல் இதுவரை டெங்குவால் 15 ஆயிரத்து 796 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொது சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் தமிழக சுகாதாரத்துறை சார்பில் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பொது சுகாதாரத்துறை இயக்குனர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ரெட் அலர்ட்

அதில், அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் தனியார் மருத்துவமனையில் டெங்கு பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

தாண்டவமாடும் டெங்கு - 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! | Red Alert For Dengue Fever Tamilnadu

நீர் நிலையங்கள், குட்டைகள், ஓடைகள் உள்ளிட்ட இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் எனவும் வீட்டில் அருகே நீர் தேங்காதவாறு பொதுமக்கள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இருக்க வேண்டும்.

உயிரிழப்புகளை தவிர்க்க பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் நகராட்சி துறை நிர்வாகத்துடன் இணைந்து அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் ஆய்வும் மேற்கொள்ள வேண்டும். டெங்குவிலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.