வயிற்றில் சிக்கிய பலூன்..7 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

Crime Thanjavur Death
By Vidhya Senthil Mar 05, 2025 10:45 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

    பலூனை விழுங்கி 7 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

7 மாத குழந்தை 

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் -சிவகாமி தம்பதியினர். இவர்களது 7 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

வயிற்றில் சிக்கிய பலூன்..7 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல்! | 7 Month Old Baby Swallowed A Balloon Tragic Death

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சதீஷ்குமார் மற்றும் அவரது சிவகாமி குழந்தை அழைத்துக் கொண்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்குச் சென்றனர். அங்குக் குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

EMI வசூலிக்க சென்ற ஊழியர்.. எரிந்த நிலையில் சடலமாக மீட்பு சம்பவம் - நடந்தது என்ன?

EMI வசூலிக்க சென்ற ஊழியர்.. எரிந்த நிலையில் சடலமாக மீட்பு சம்பவம் - நடந்தது என்ன?

 பலூன்   

பின்னர் இது குறித்து காவல்துறையினருக்குத் தகவல் தெரித்தனர். உடனடியாக விரைந்து வந்த அவர்கள் குழந்தை உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை செய்த போது குழந்தையின் வயிற்றில் பலூன் இருந்தது தெரியவந்தது.

வயிற்றில் சிக்கிய பலூன்..7 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல்! | 7 Month Old Baby Swallowed A Balloon Tragic Death

அதை அகற்றிய மருத்துவர்கள் பலூனை விழுங்கியதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு குழந்தை இறந்ததாகத் தெரிவித்தனர்.இதனையடுத்து இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.