திருமணத்திற்கு மறுத்த காதலன்.. தேநீரில் எலி பேஸ்டை கலந்த காதலி - பகீர் பின்னணி!
திருமணம் செய்ய மறுத்த காதலனுக்கு டீயில் எலி மருந்து கலந்து கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதலி
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூரை சேர்ந்தவர் ஜெயசூர்யா (24 வயது) இவர் ஆந்திராவில் உள்ள சட்டக் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். மேலும் இவர் வீட்டிலிருந்தபடியே பிரவுசிங் சென்டர் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில் இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரம்யா என்ற கல்லூரி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.தங்களது காதல் விவகாரத்தை வீட்டில் தெரிவித்த போது உறவு முறையில் நீங்கள் இருவரும் அண்ணன் தங்கை முறை எனத் தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயசூர்யா ரம்யா உடனான காதலைக் கைவிட்டு அவருடன் பேசுவதை நிறுத்தி விட்டார். ஆனால் தனது கைவிடமுடியாத ரம்யா காதலிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டி வந்துள்ளார். இதனை ஜெயசூர்யா கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார்.
எலி மருந்து
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி மாலை ரம்யா ஜெயசூர்யாவின் வீட்டிற்குச் சென்றுள்ளார். யாரும் இல்லாத சமயத்தில் சமாதானமாகப் பேசி சமையல் அறைக்குச் சென்று தேநீர் போட்டு கொடுத்துள்ளார். அப்போது ஏதும் அறியாமல் ஜெயசூர்யா குடித்துள்ளார்.
பின்னர் வீட்டுக்குச் சென்ற ரம்யா, வாட்ஸ்அப் மூலம் உடலில் ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா? ஜெயசூர்யாவிடம் கேட்டுள்ளார். இதற்கு ஜெயசூர்யா, "ஆமாம்" எனக் கூறவே நான் தான் தேநீரில் எலி பேஸ்டை கலந்து கொடுத்தேன் எனச் சொல்லியிருக்கிறார்.
இதனையடுத்து வாந்தி எடுத்து ஜெயசூர்யாவின் உடல்நிலை மோசமானதால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய உதவி பிரதேச செயலாளரின் மரணம்...! மீண்டும் ஆரம்பமாகும் விசாரணை IBC Tamil

எந்த விடயத்திலும் perfection பார்க்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
