காலை வேளையில் பெண்கள் எடுத்துக்கொள்ள கூடாத உணவுகள் -இது தெரியாம போச்சே!
பெண்கள் காலையில் எடுத்துக் கொள்ள கூடாத 7 உணவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
காலை உணவை முற்றிலுமாக தவிர்க்கும் பழக்கம் உங்களிடத்தில் இருந்தால் நாளடைவில் அது உங்கள் இதய நலனை பாதிக்கும். மேலும் காலை உணவைத் தவிர்த்தவர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில், பெரும்பாலானோருக்கு ரத்த அழுத்தம் இயல்பைவிட அதிகமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பெண்கள் காலை நேரத்தில் எடுத்துக் கொள்ள கூடாத 7 உணவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஒயிட் பிரட் டோஸ்ட்:
மாவில் இருந்து தயாரிக்கப்படுவதில் எந்தவித ஊட்டச்சத்துக்களும் இல்லை. இதை காலை வேளையில் எடுக்கும்போது ரத்தத்தின் சர்க்கரை அளவு தான் அதிகரிக்கும்.காலை உணவில் கட்டாயம் ஒயிட் பிரட் டோஸ்ட் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
பான் கேக்
பான் கேக் செய்யும் போது மாவு, வெல்லம், சிரப், தேன் ஆகியவை சேர்க்கப்படும் . இவை அனைத்தும் அதிக கலோரிகள் கொண்டவை. மாவில் முழுக்க முழுக்க கார்போஹைட்ரேட் உள்ளது. இது ரத்தத்தின் சர்க்கரை அளவையும் உடல் பருமனையும் அதிகரிக்கும்.
ஓட்மீல்
செயற்கையான தயாரிக்கப்படும் ஃபிளவேர்களில் அதிக இனிப்பும் சேர்க்கப்பட்டு இருக்கும். இது கலோரிகளும் அதிகம். சர்க்கரை அளவையும் அதிகரிக்கும்.ஓட்மீல்லை காலை வேளையில் முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது.
கார்ன் ஃபிளேக்ஸ்
டயட் உணவு என்று நினைத்து கார்ன் ஃபிளேக்ஸ்(செரல்) போன்றவைகளை வாங்கி பால் போட்டு சாப்பிட்டு காலை உணவை முடித்துக் கொள்கிறோம். ஆளால் இதை கட்டாயம் காலையில் சாப்பிடவே கூடாது. ரெடிமேட் செரல் வகைகளில் சர்க்கரை மற்றும் பதப்படுத்திகள் சேர்க்கப்பட்டிருக்கும்.
பழ ஸ்மூத்தி
காலை உணவாக ஸ்மூத்தி எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது என்று மருத்துவர்கள் கூட அறிவுறுத்துவார்கள். அவை காய்கறிகள் மற்றும் கீரை ஸ்மூத்தி வகைகள். ஆனால் நம்மில் பலர் பிடித்த பழங்களையெல்லாம் போட்டு ஸ்மூத்தியாக அரைத்து காலை உணவாக எடுத்துக் கொள்கிறார்கள். காலை நேர ரத்த சர்க்கரையை நிச்சயம் அதிகரிக்கும்.