உடல் எடையை குறைக்கும் குடைமிளகாய் கிரேவி! சுவையாக செய்வது எப்படி?

lifestyle-health
By Nandhini Aug 13, 2021 01:36 PM GMT
Report

குடைமிளகாயை உணவில் நாம் அதிகமாக சேர்ப்பதன் மூலம் உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவுகிறது. குடைமிளகாயில் கொழுப்பு சத்து, கொலஸ்ட்ரால் மற்றும் சோடியம் இவை அனைத்தும் குறைவாகவே உள்ளது எனவே, குடைமிளகாய் உடல் எடையைக் குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.

மேலும் குடைமிளகாய் உடலில் மெட்டபாலிசத்தை அதிகரித்து கலோரிகளை அதிக அளவில் எறிக்க உதவுகிறது. கலோரிகள் குறைந்தால் உடல் எடை வேகமாக குறையும். கு

டைமிளகாயை உணவில் சேர்த்தால் விரைவில் ஜீரணம் ஆகிவிடும்.எனவே, செரிமான பிரச்சனை உள்ளவர்கள் உணவில் குடைமிளகாயை அதிகமாக சேர்த்துக் கொள்ளவும்.

உடல் எடையை குறைக்கும் குடைமிளகாய் கிரேவி! சுவையாக செய்வது எப்படி? | Lifestyle Health

தேவையான பொருட்கள் -

நறுக்கிய குடை மிளகாய் - 2 கப்,

நறுக்கிய வெங்காயம் - 2 கப்,

தக்காளி - 2 கப்,

மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்,

தனியா தூள் - 2 டேபிள் ஸ்பூன்,

இஞ்சி, பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்,

முந்திரி - 10,

தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்,

சீரகம் - சிறிது, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

கொத்த மல்லித்தழை - சிறிது.

செய்முறை -

  • முந்திரியை 15 நிமிடம் ஊற வைத்து, தேங்காய்த் துருவலுடன் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • ஒரு கடாயில் எண்ணெய்யை ஊற்றி, காய்ந்ததும் அதில் சீரகம் போட்டு தாளிக்க வேண்டும்.
  • பின்னர், வெங்காயத்தை சேர்த்து பொன்னிற மாக வதக்க வேண்டும்.
  • வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பிறகு, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகும் அளவிற்கு நன்கு வதக்க வேண்டும்.
  • பின்னர், தக்காளி சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ள வேண்டும்.
  • பின்னர், மிளகாய் தூள், தனியா தூள், உப்பு, குடை மிளகாய் போட்டு நன்கு வதக்க வேண்டும். வதக்கிய பிறகு, அரைத்து வைத்துள்ள விழுதை அதில் சேர்க்க வேண்டும்.
  • அனைத்தும் சேர்ந்து நன்கு கொதித்து வந்ததும் கொத்த மல்லித் தழையை தூவி இறக்க வேண்டும்.