அடிக்கடி நெஞ்சு வலியா? வீட்டில் இருந்தே நிரந்தர தீர்வு - மாரடைப்பா என்பதை எப்படி கண்டுபிடிக்கலாம்?

health tips life style all
By Anupriyamkumaresan Jul 24, 2021 10:10 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in ஆரோக்கியம்
Report

நெஞ்சு வலி அல்லது இதயத்துக்கு அருகில் அசெளகரியமான நிலையை பலர் அடிக்கடி அனுபவிக்கலாம். இது கூர்மையாகவோ அல்லது எரிச்சலாகவோ, மார்பு அழுத்துவது போன்றோ இருக்கலாம். இது சாதாரணமானது.

அடிக்கடி நெஞ்சு வலியா? வீட்டில் இருந்தே நிரந்தர தீர்வு - மாரடைப்பா என்பதை எப்படி கண்டுபிடிக்கலாம்? | Lifestyle For All

இதயத்துக்கு இரத்த ஓட்டம் குறையும் போது உண்டாகும் தீவிரமான நிலை ஆஞ்சினாவால் உண்டாகும் இதய வலி. இந்த வலியை எதிர்கொண்டு மருத்துவரிடம் இதற்கு சிகிச்சை பெற்றவர்கள் அதற்கான மருந்துகளை எடுத்துகொள்ள வேண்டும். அவர்களுக்கு இந்த வைத்தியம் பொருந்தாது. செரிமான பிரச்சனைகள் தசைப்பிடிப்பு போன்ற உபாதையால் உண்டாகும் இதய வலியை நிவர்த்தி செய்வதற்கான வீட்டு வைத்தியம் குறித்து இப்போது பார்க்கலாம்.

அடிக்கடி நெஞ்சு வலியா? வீட்டில் இருந்தே நிரந்தர தீர்வு - மாரடைப்பா என்பதை எப்படி கண்டுபிடிக்கலாம்? | Lifestyle For All

​ பாதாம்:

இதய வலி உண்டாகும் போது அமில ரிஃப்ளக்ஸ் அல்லது இரைப்பை உணவுக்குழாய் நோய் இதற்கு காரணமாக இருக்கலாம். இரண்டு நிலைமைகளும் கடுமையான மார்பு வலியை ஏற்படுத்தக்கூடும். நெஞ்செரிச்சல் ஏற்படும் போது சில பாதாம் சாப்பிடுவது அல்லது பாதாம் பால் குடிப்பது அறிகுறிகளை எளிதாக்க கூடும். இந்த கூற்றை ஆதரிக்க ஆய்வுகள் இல்லை ஆனால் உணவுக்குழாயில் உள்ள அமிலத்தை ஆற்றவும் நடுநிலையாக்கவும் உதவக்கூடும். அதே நேரம் பாதாம் கொழுப்பு அமில ரிஃப்ளக்ஸை தூண்டுகிறது. கொழுப்பு நிறைந்த உணவுகள் குறைந்த உணவுக்குழாய் சுழற்சியை தளர்த்தி உணவுக்குழாயில் அமிலம் பின்னோக்கி செல்ல அனுமதிக்கும். ​

அடிக்கடி நெஞ்சு வலியா? வீட்டில் இருந்தே நிரந்தர தீர்வு - மாரடைப்பா என்பதை எப்படி கண்டுபிடிக்கலாம்? | Lifestyle For All

ஆப்பிள் சீடர் வினிகர்:

ஆப்பிள் சீடர் வினிகரை உணவுக்கு முன்பு ஒரு டம்ளர் தண்ணீருடன் குடிப்பது அல்லது இதய வலி ஏற்படும் போது அமில ரிஃப்ளக்ஸ் மற்றொரு வீட்டு வைத்தியம். ஆப்பிள் சீடர் வினிகர் நெஞ்செரிச்சலை குறைக்கிறது என்பதை காட்ட சிறிய அளவு சான்றுகள் உண்டு. சிலர் அமில ரிஃப்ளக்ஸ் அனுபவிக்கும் போது அவர்களது வயிறு போதுமான அமிலத்தை உற்பத்தி செய்யாது. ஆப்பிள் சீடர் வினிகர் வயிற்றில் அமிலத்தின் அளவு அதிகரிப்பதன் மூலம் உதவக்கூடும்.ஆப்பிள் சீடர் வினிகர் அசிட்டிக் அமிலம் கொண்டவை. இது உணவை உடைக்கவும் செரிமானத்தை ஆதரிக்கவும் உதவும். ​

அடிக்கடி நெஞ்சு வலியா? வீட்டில் இருந்தே நிரந்தர தீர்வு - மாரடைப்பா என்பதை எப்படி கண்டுபிடிக்கலாம்? | Lifestyle For All

சூடான பானம்:

மார்பு வலிக்கு வாய்வு பொதுவான காரணம் ஆகும். சூடான பானம் செரிமான அமைப்பை புதுப்பிக்க செய்யும். இது வாயு மற்றும் வீக்கத்தை எளிதாக்கும். செம்பருத்தி தேநீர் செரிமானம் மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. செம்பருத்தி செடி இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. மேலும் இது கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகளை குறைக்கிறது என்று ஆராய்ச்சி சொல்கிறது. செம்பருத்தி பூ தேநீர் குடிப்பது பாதுகாப்பானது. ​

அடிக்கடி நெஞ்சு வலியா? வீட்டில் இருந்தே நிரந்தர தீர்வு - மாரடைப்பா என்பதை எப்படி கண்டுபிடிக்கலாம்? | Lifestyle For All

குளிர் ஒத்தடம்:

இதயவலி சில நேரங்களில் மார்பு பகுதியில் தசைப்பிடிப்பு உண்டாவதால் ஏற்படுகிறது. அதிக பளு தூக்குதல், குழந்தையை தூக்குவது, கனமான பொருள்களை தூக்கி மேலே ஏறுவது போன்றவை எல்லாமே இந்த மார்பு வலிக்கு காரணமாக இருக்கலாம் மார்புசுவரின் கோஸ்டோகாண்ட்ரிடிஸ் வீக்கத்துக்கு பெரும்பாலும் காரணமாகிறது. இந்த இடத்தில் குளிர் ஒத்தடம் பயன்படுத்துவதன் மூலம் வீக்கமும் வலியும் குறைகிறது. ​

அடிக்கடி நெஞ்சு வலியா? வீட்டில் இருந்தே நிரந்தர தீர்வு - மாரடைப்பா என்பதை எப்படி கண்டுபிடிக்கலாம்? | Lifestyle For All

மாதுளை சாறு:

உணவில் மாதுளை சாறு சேர்ப்பது இதயத்துக்கு நன்மை அளிக்கும். மாதுளையில் இருக்கும் ஆன் டி ஆக்ஸிடண்ட்கள் கொழுப்பை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. தமனிகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். மாதுளை சாறு குடிப்பது இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது என்று ஆய்வு கண்டறிந்துள்ளது. ​

அடிக்கடி நெஞ்சு வலியா? வீட்டில் இருந்தே நிரந்தர தீர்வு - மாரடைப்பா என்பதை எப்படி கண்டுபிடிக்கலாம்? | Lifestyle For All

சமையலறை மசாலா பொருள்கள்:

மிளகாய்த்தூள், சிவப்பு மிளகாய்க்கு காரம் கொடுக்கும் கேப்சைசின் ரசாயனம் இதயத்துக்கு பலவித நன்மைகளை செய்கிறது. பூண்டு பல ஆண்டுகளாக இதய பிரச்சனைகளை எதிர்த்து போராட பயன்படுத்தப்படுகிறது. இஞ்சி காரமான இஞ்சி அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. ரத்த அழுத்த கொழுப்பை குறைக்கும் ட்ரைகிளிசரைட்களை குறைக்கவும் இரத்த உறைதலை தடுக்கவும் பயன்படுகிறது. 

மார்பு வலி சிகிச்சைக்குரிய வலிதான் என எப்படி கண்டறிவது?

மார்பு வலி அசாதாரணமாக இருந்தால் கண்டிப்பாக வீட்டு வைத்தியம் நோக்கி போக கூடாது. தாமதிக்காமல் மருத்துவ சிகிச்சை தேவை. குமட்டல், மூச்சுத்திணறல், வியர்வை போன்ற அறிகுறிகளுடன் அல்லது அவை இல்லாமல் தொடர்ந்து மார்பு வலி இருந்தால் நீங்கள் உடனடியாக அவசர சிகிச்சை பெற வேண்டும்.

ஏனெனில் இது மாரடைப்பாக இருக்கலாம். இந்த மாரடைப்பு அறிகுறிகள் விரைவாக அதிகரிக்கலாம்.​இதயத்தை பாதுகாக்கும் வைத்தியங்கள்: இதயவலிக்கு வீட்டு வைத்தியங்கள் நிவாரணம் அளிக்காது. ஆனால் நீண்ட காலமாக இதய ஆரோக்கியத்தை வேலை செய்ய இவை உதவும். பழங்கள், காய்கறிகள்நிறைந்த ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி போன்ற ஆரோக்கிய வாழ்க்கை முறை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடியவை.​