7 வருஷத்திற்குப் பின்; 61 பேரின் உயிரை எடுத்த முகலிவாக்கம் வழக்கு - முக்கிய தகவல்
பல உயிர்களை எடுத்த முகலிவாக்கம் வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
முகலிவாக்கம் வழக்கு
சென்னை போரூரை அடுத்த முகலிவாக்கம் பகுதியில் கட்டப்பட்டு வந்த 11 மாடி கட்டிடம் 2014 ஜூலை மாதம் இடிந்து விழுந்தது. இதில் 61 பேர் உயிரிழந்தனர், 21 பேர்படுகாயமடைந்தனர்.
இதன்பின் அருகில் இருந்த மற்றொரு கட்டிடமும் 2014 ஆம் ஆண்டு நவம்பரில் இடிக்கப்படது. அப்போது முதல்வராக இருந்த மறைந்த ஜெயலலிதா இச்சம்பவம் தொடர்பான விசாரணைக்கு சிறப்பு புலனாய்வு குழுவினை நியமித்தார்.
விசாரணை
தொடர்ந்து, நீதிபதி ரகுபதி தலைமையில் ஒருநபர் ஆணைத்தையும் அமைத்து உத்தரவிட்டார். முதல்வர் அமைத்த புலனாய்வு குழுவின் விசாரணை திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என அப்போது திமுக பொருளாளராக இருந்த, தற்போதைய முதல்வர் ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நலவழக்கு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் உண்மை குற்றவாளிகளை பாதுகாக்கும் வகையில் இந்த விசாரணை உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு 2017 ம் ஆண்டு விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியக இருந்த கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி அமர்வு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
அதனையடுத்து, இந்த வழக்கு 7 ஆண்டுகளுக்கு பின் விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.