செந்தில் பாலாஜி இனி அமைச்சரா ? - உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை

By Irumporai Jun 28, 2023 03:47 AM GMT
Report

அமைச்சரவையில் செந்தில் பாலாஜி இருக்க கூடாது என தொடரப்பட்ட வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகின்றது.

 அமலாக்கத்துறை கைது

அமலாக்கத்துறையினால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி , அமைச்சரவையில் இலக்கா இல்லாத அமைச்சராக தொடர்வார் என தமிழக அரசு அறிவித்திருந்தது. மேலும் அவர் பொறுப்பில் இருந்த இரண்டு துறைகள் மற்ற அமைச்சர்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை உயர்நீதிமன்றத்தில் புதுக்கோட்டையை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவர் வழக்கு தாக்கல் செய்து இருந்தார்.

செந்தில் பாலாஜி இனி அமைச்சரா ? - உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை | Senthil Balaji Cabinetmadurai High Court Today

இன்று விசாரணை

செந்தில் பாலாஜியிடம் இருந்த மின்சாரத்துறை, கலால்துறை இருவேறு அமைச்சர்களிடம் பிரித்து வழங்கப்பட்டது. தற்போது செந்தில் பாலாஜி இலாகாயில்லாத அமைச்சராக தொடர்வது ஆகியவை அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது என கூறி அந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.