தேர்தலில் சொத்துக்களை மறைத்த இபிஎஸ்.? சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

ADMK Edappadi K. Palaniswami
By Irumporai Jun 06, 2023 02:53 AM GMT
Report

2021 தேர்தலில் சொத்துக்களை மறைத்த புகாருக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்படுகிறது.

  ஈபிஎஸ் மீது வழக்கு

2021 சட்டமன்ற தேர்தலில் சேலம் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வென்றார். அவர் தனது வேட்புமனுவில் சொத்துக்களை மறைத்து வெளியிட்டுள்ளார் என மிலானி என்பவர் சேலத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த வழக்கு சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. 

தேர்தலில் சொத்துக்களை மறைத்த இபிஎஸ்.? சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை | Eps Against The Complaint High Court Today

இன்று விசாரணை  

இந்த புகாருக்கு எதிர்ப்பு தெரிவித்து, மிலானி என்பவர் சேலத்தை சேர்ந்தவரும் இல்லை. தன்னை எதிர்த்து போட்டியிட்டவரும் இல்லை. தான் தவறான தகவலை வேட்புமனுவில் கொடுக்கவும் இல்லை என கூறி சேலத்தில் பதியப்பட்ட வழக்கை விசாரணை செய்ய வேண்டாம் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.