6 சகோதரிகளை திருமணம் செய்த சகோதரர்கள் - அரங்கேறிய ஓராண்டு திட்டம்!
சகோதரர்கள் 6 பேர், 6 சகோதரிகளை திருமணம் செய்துள்ளனர்.
வரதட்சணை இல்லை
பாகிஸ்தான், பஞ்சாப் மாகாணத்தில் 6 சகோதரர்கள் மணமக்கள் வீட்டாரிடம் வரதட்சணை எதுவும் வாங்காமல் 6 சகோதரிகளை திருமணம் செய்துள்ளனர். இதில் 100 விருந்தினர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.
இஸ்லாமிய போதனைகளை கடைபிடித்து எளிமையாக திருமணம் செய்துள்ளனர். இதுகுறித்து அவர்களில் மூத்த சகோதரர் கூறுகையில், நாங்கள் எடுத்துக்காட்டாக இருக்க விரும்பினோம்.
சகோதரர்கள் திருமணம்
சில இடங்களில் திருமண செலவுகளுக்காக மக்கள் நிலங்களை விற்கின்றனர். அல்லது கடன் வாங்குகின்றனர். ஆனால், திருமணங்கள் எளிமையானவை என காண்பிக்கவும், தேவையற்ற நிதி நெருக்கடியில் சிக்க வேண்டாம் என எடுத்து காட்ட வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்தோம் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த திருமணத்திற்காக மணமகன்கள் ஓராண்டாக திட்டமிட்டு வந்துள்ளனர். ஏனென்றால், அவர்களின் இளைய சகோதரன் 18 வயது நிறைவடைந்த பின்னர் ஒரே நாளில் திருமணம் செய்து கொள்வது என முடிவு செய்துள்ளனர்.