ஒரே உடலில் 2 இனப்பெருக்க உறுப்பு - தாயாகவும், தந்தையாகவும் வாழும் பெண்!
பெண் ஒருவர் உடலில் 2 இனப்பெருக்க அமைப்பு உருவாகியுள்ளது.
2 இனப்பெருக்க அமைப்பு
சீனா, பிஷன் கவுண்டியில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் லியு. இவர் தனது 18 வயதில் டாங் என்ற நபரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
அதனைத் தொடர்ந்து லியுவின் உடலில் ஹார்மோன் காரணமாக தாடியின் வளர்ச்சி, மார்பக அளவு குறைவு, ஆண் இனப்பெருக்க உறுப்புகளின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. இதனால் கணவர் டாங் அவரை விவகாரத்து செய்துள்ளார். பின், தனது மகனை கணவரிடம் விட்டுவிட்டு, லியு வேறொரு மாவட்டத்திற்கு இடம்பெயர்ந்துள்ளார்.
வினோத சம்பவம்
அங்கு ஒரு காலணி தொழிற்சாலையில் வேலை பார்த்து ஆணாக வாழ ஆரம்பித்துள்ளார். இந்நிலையில், லியு, ஜோ என்ற சக பெண் ஊழியரை காதலித்துள்ளார். ஜோவும் அவரை திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்துள்ளார். ஆனால், லியுவின் அடையாள அட்டையில் அவர் பெண் என அடையாளப்படுத்தியதால் அவர்களால் திருமணம் செய்துக்கொள்ள முடியவில்லை.
அதே சமயம் ஓரினச்சேர்க்கை திருமணமும் அங்கு அங்கீகரிக்கப்படாததால் அதற்கும் சாத்தியமில்லை. எனவே, தனது முன்னாள் கணவர் டாங்கியை, ஜோவை திருமணம் செய்துக்கொள்ளும்படி லியு கேட்டுள்ளார். மேலும், அவர்களுடன் லியு வாழ்வதாக முடிவு எடுத்துள்ளனர்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு லியு மூலம் ஜோ கர்ப்பமாகி ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். இதன்மூலம், லியு தாயாகவும் தந்தையாகவும் வாழ்ந்து வருகிறார்.