1 நாளைக்கு ரூ.48 கோடி சம்பளம்; சுந்தர் பிச்சையை விட 10 மடங்கு அதிகம் - யார் அந்த இந்திய வம்சாவளி நபர்!
சுந்தர் பிச்சையை விட 10 மடங்கு அதிக சம்பளம் வாங்கும் நபர் குறித்து பார்ப்போம்.
ஜக்தீப் சிங்
உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் தலைமை நிர்வாக அதிகாரி என்ற பெயரை தற்போது ஜக்தீப் சிங் என்பவர் பெற்றுள்ளார். பிடெக் பட்டத்தை ஸ்டார்ன்போர்டு பல்கலையிலும், எம்பிஏ படிப்பை கலிபோர்னியா பல்கலையிலும் முடித்தவர்.
முதன்முதலாக எச்பி நிறுவனத்தில் சேர்ந்து சன் மைக்ரோசிஸ்டம்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றினார். பின், பல ஸ்டார்அப் நிறுவனங்களை தொடங்கினார்.
அதிக வருமானம்
தொடர்ந்து, 2010ல் QuantumScape என்ற நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம் புதிய தலைமுறை திட-நிலை பேட்டரிகளை உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்தி வருகிறது.
இது எலக்ட்ரிக் வாகன உலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக வோக்ஸ்வாகன் மற்றும் பில் கேட்ஸ் போன்ற தொழில்துறை ஜாம்பவான்கள் பணத்தை முதலீடு செய்தனர்.
அதன்படி, பங்குகள் மூலம் கிடைக்கும் வருவாய் உட்பட ஓராண்டுக்கு அவருக்கு கிடைக்கும் சம்பளம் மட்டும் 2.3 பில்லியன் டாலராகும். அதாவது இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.19,000 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.