பழைய ரூபாய் நோட்டில் இந்த நம்பர் இருக்கா? லட்சம் லட்சமாக சம்பாதிக்கலாம் - எப்படி தெரியுமா?
பழைய ரூபாய் நோட்டு இருந்தால் லட்சம் லட்சமாக சம்பாதிக்கலாம் என்ற விளம்பரம் ஒன்று சுற்றி வருகிறது.
பழைய ரூபாய் நோட்டு
இஸ்லாமிய மக்களிடையே 786 என்ற எண் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. 1, 5, 10, 20, 50, 100 அல்லது 2000 ரூபாய் நோட்டுகள் என எந்த ரூபாய் நோட்டுகளாக இருந்தாலும் சரி,
அதில் இந்த 786 என்ற எண் இருந்தால், அதை விற்று பல லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம். 786 என்ற எண் ரூபாய் நோட்டு இருப்பவர்கள், www.ebay.com என்ற வெப்சைட்டில் விற்பனை செய்யலாம்.
அதிலுள்ள Vendor பக்கத்தை கிளிக் செய்து விற்பனையாளராக உங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். பிறகு நீங்கள் வைத்திருக்கும் 786 எண் கொண்ட ரூபாய் நோட்டை இரண்டு பக்கமும் தெளிவாக போட்டோ எடுத்துக் கொண்டு, மேற்கண்ட விற்பனை தளத்தில் அப்லோடு செய்ய வேண்டும்.
கவனம் தேவை..
பிறகு உங்களது போன் நம்பர், மின்னஞ்சல் ஐடியையும் கொடுக்க வேண்டும். இந்த விளம்பரத்தை பார்ப்பவர்கள், தங்களுக்கு தேவையென்றால், உங்களிடம் அணுகுவார்கள். இப்படி நாணயங்களை விற்பனை செய்வது சட்டபூர்வமானது தான் என்றாலும், நீங்கள் விற்கும் தளத்தின் விதிமுறைகளை சரியாக தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்த ரூபாய் நோட்டு விற்பனையில்கூட மோசடிகள் நடக்கின்றன. இதுபோன்ற ஆன்லைன் மூலமாக ரூபாய் நோட்டு, நாணயங்களை விற்பனை செய்வதையும், வாங்குவதையும் ரிசர்வ் வங்கி எப்போதுமே ஆதரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.