H1B விசாவுக்கு ஆபத்து?மஸ்க் யூ டர்ன், தலையாட்டும் டிரம்ப் - இந்தியர்கள் கலக்கம்!
H1B விசா குறித்த தகவல் இந்தியர்களை அச்சமடைய வைத்துள்ளது.
H1B விசா
அமெரிக்கர் அல்லாதவர்களுக்கு எச்1 பி விசா வழங்கப்பட்டு வருகிறது. இந்த விசாவை நிறுத்த வேண்டும் என அமெரிக்க வலதுசாரிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
இதனால் அமெரிக்கர்களுக்கு நல்ல வேலை கிடைப்பதில்லை என்று குற்றம்சாட்டினர். இதனைத் தொடந்து, டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் எச்1 பி விசாவுக்கு ஆதரவாக போர் தொடுக்க கூட தயார் எனக் கூறி இந்த கருத்தை கண்டித்தார்.
இந்தியர்கள் அச்சம்
மேலும், அமெரிக்கா FIRST என்பதே தனது கொள்கை என கூறி வந்த டிரம்ப், திடீரென h1b விசாவுக்கு எப்போதும் ஆதரவாகவே இருந்திருப்பதாக கூறினார். எலான் மஸ்குடனான நட்பு தான் டிரம்பின் இந்த மாற்றத்துக்கு காரணம் எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில், எச்1 பி விசாவை தொடர்ந்து பயன்படுத்துவதற்கு அதிக கட்டணம் விதிக்க வேண்டும் என மஸ்க் கூறியிருக்கிறார். அங்கு இந்த விசா வைத்திருப்பவர்களில் 10ல் 7 பேர் இந்தியர்கள்.
தற்போது இதுகுறித்த விவாதங்கள் தீவிரமடைந்த நிலையில் இந்தியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.