பிறந்தாச்சு 2025; கொள்ளை நோய் கோர தாண்டவமாடும் - பாபா வாங்கா, நாஸ்டிரடாமஸ் கணிப்பு!
பாபா வாங்கா மற்றும் நாஸ்டிரடாமஸ் வெளியிட்டுள்ள கணிப்புகள் கவனம் பெற்றுள்ளது.
பாபா வாங்கா
பல்கேரியாவை சேர்ந்த பாபா வாங்கா மற்றும் பிரான்சை சேர்ந்த நாஸ்டிரடாமஸ் வெளியிட்டுள்ள கணிப்புகள் பல நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளன.
இவர்களது பல கணிப்புகள் அவ்வாறே அரங்கேறியும் உள்ளது. இந்நிலையில், 2025-ம் ஆண்டு குறித்த கணிப்புகள் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. ஐரோப்பிய பகுதிகளில் பேரழிவை ஏற்படுத்தும் போர் ஏற்படும்.
மக்கள் தொகை அதிக அளவில் குறையும். ரஷ்யா தப்பி பிழைப்பது மட்டுமில்லாமல், உலகின் மீது ஆதிக்கம் செலுத்தும். அமெரிக்காவின் மேற்கு கடலோர பகுதிகளில் நிலநடுக்கங்கள் மற்றும் எரிமலைகள் உள்பட தொடர்ச்சியாக பேரழிவை ஏற்படுத்த கூடிய இயற்கை பேரிடர்கள் ஏற்படும் என பாபா வாங்கா கணித்துள்ளார்.
நாஸ்டிரடாமஸ்
பேரழிவை ஏற்படுத்தும் மோதல் மற்றும் பிளேக் நோய் இவற்றிற்கு பின்னர், இங்கிலாந்து வீழ்ச்சியை சந்திக்கும். பெரிய அளவில் கொள்ளை நோய் ஏற்படும். வேறெதனையும் விட ஒரு கொடிய எதிரியாக அது இருக்கும்.
போரால் வீரர்கள் சோர்ந்து போய் நீண்டகால போர் ஒன்று ஒத்தி வைக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார். மனிதர்களுடன் வேற்று கிரகவாசிகளின் தொடர்பு, விளாடிமிர் புதின் மீது நடத்தப்படும் படுகொலை முயற்சி,
ஐரோப்பிய நாடுகளில் பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் மன்னர் சார்லஸ் அரசுக்கு எதிரான கொந்தளிப்பு உள்ளிட்டவையும் அடங்கும்.