HMPV வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள்; தரதரவென இழுத்து செல்லும் மருத்துவ பணியாளர்கள்?
நோயாளிகளை மருத்துவ பணியாளர்கள் தரதரவென இழுத்து செல்லும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
HMPV வைரஸ்
சீனாவில் HMPV வைரஸ் தொற்று தீவிரமடைந்து வருகிறது. சுவாச கோளாறால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2001 இல் நெதர்லாந்தில் முதன்முதலில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ்
இருமல், காய்ச்சல், மூக்கடைப்பு மற்றும் மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் HMPV வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை வெள்ளை நிற உடை அணிந்த மருத்துவ பணியாளர்கள் தரதரவென இழுத்து செல்வதான வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது.
Fact Check
தொடர்ந்து அங்கு சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. பரவும் இந்த வீடியோ குறித்த உண்மைத் தன்மையை ஆராய்கையில், இது இரண்டு வருடங்கள் பழமையானது என தெரியவந்துள்ளது. 2022ல் பதிவிடப்பட்ட இந்த வீடியோவில்,
“நள்ளிரவில் குடிமக்களை தனிமைப்படுத்தப்பட்ட முகாமுக்கு சீனா குவாங்டாங் மருத்துவ ஊழியர்கள் இழுத்துச் செல்கின்றனர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன்மூலம், சமீபத்திய HMPV வைரஸ் தொற்று பரவலை குறித்த சம்பவம் இதுவல்ல என்பது உறுதியாகியுள்ளது.