பெண்களுக்கு ரூ.5 லட்சம்; மத்திய அரசு அசத்தல் திட்டம் - உடனே விண்ணப்பியுங்கள்!
பெண்களுக்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் தரப்படுகிறது.
லக்பதி திதி
லக்பதி திதி (Lakhpati Didi) எனும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் நாடு முழுவதும் உள்ள சுமார் 3 கோடி பெண்களை தொழில் முனைவோராக மாற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளது.
இதன் மூலம், பெண்களுக்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. தற்போது 83 லட்சம் சுய உதவி சங்கங்கள் உள்ளன. அவற்றில் 9 கோடிக்கும் அதிகமான பெண்கள் அங்கம் வகிக்கின்றன. இதன் கீழ் சந்தை தேவைக்கேற்ப பொருட்களை தயாரிப்பதற்கான தொழில்நுட்ப அறிவு மற்றும் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
எப்படி விண்ணப்பிப்பது?
சுயதொழில் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களை துறைசார் விற்பனை நிலையங்கள் மற்றும் கண்காட்சிகளில் விற்பனை செய்வதன் மூலம் வருமானம் உயர்கிறது. 18 முதல் 50 வயதுக்குட்பட்ட கிராமப்புற பெண்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும். லக்பதி யோஜனா இணையதளம் மூலம் விண்ணபிக்கலாம்.
இதற்கு விண்ணப்பிக்க தார் கார்டு, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், சுய உதவி குழு உறுப்பினர் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.