முதன்முதலாக.. தமிழக ரேஷன் கடைகளில் நாப்கின் - அசத்தல் திட்டம்!
நியாய விலை கடைகளில் பெண்களுக்கு குறைந்த விலையில் நாப்கின் விற்பனை துவங்கப்பட்டுள்ளது.
நியாய விலை கடை
கரூர், மகாதானபுரம் நியாய விலை கடையில் மகளிர் சுய உதவி குழு மூலம் தயாரிக்கப்பட்ட சுகாதார சானிட்டரி நாப்கின் விற்பனையை மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் துவக்கி வைத்தார்.
அதன்பின் பேசிய அவர்,
தமிழகத்தில் முதன்முதலாக கரூர் மாவட்டத்தில் இந்த விற்பனை மகாதானப்புரத்தில் நியாய விலை கடையில் துவக்கப்பட்டுள்ளது. ஆறு நாப்க்கின்கள் அடங்கிய ஒரு பாக்கெட் ரூபாய் 30 விலையில் நியாய விலை கடையில் விற்பனை செய்யப்படுகிறது.
நாப்கின் விற்பனை
இது வெளிசந்தையில் விற்பனை செய்யப்படுவதை விட 25 சதவீதம் விலை குறைவாக உள்ளது. கரூர் மாவட்டத்தில் 21 நியாய விலை கடைகளில் விற்பனை செய்யப்பட உள்ளதாகும். மாதவிடாய் காலங்களில் பெண்கள் சுகாதாரம் முறையில் இருப்பதற்காக இந்த சுகாதார சானிட்டரி நாப்கின்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் அட்டைதாரர்கள் மட்டுமில்லாமல் மற்ற பெண்கள் அனைவரும் நியாய விலை கடைகளில் இந்த சுகாதார சானிட்டரி நாப்கினை வாங்கிச் செல்லலாம் எனவும், பொது நியாயவிலை கடைகளில் விற்கப்படும் போது கிராமப் பகுதியைச் சேர்ந்த பெண்கள் அதிகளவில் இங்கு வாங்கி பயன்பெறலாம் என்ற அடிப்படையில் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.