கடும் பொருளாதார நெருக்கடியிலும் சானிட்டரி நாப்கின்களுக்கு வரிச்சலுகை!
பெண்களுக்கான சானிட்டரி நாப்கின் மீதான வரியை இலங்கை அரசு குறைத்துள்ளது.
இலங்கை அரசு
பெண்கள் மற்றும் பாடசாலை மாணவிகள் மத்தியில் சுகாதாரத்தை உறுதி செய்தல் மற்றும் சுகாதாரப் பொருட்களை குறைந்த விலையில் பெற்றுக்கொடுத்தல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவமளிக்கும் வகையில்,
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சானிட்டரி நாப்கின்கள் தயாரிப்புக்காக வெளிநாடுகளில் இருந்து மூலப்பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
வரிச்சலுகை
இந்நிலையில், இறக்குமதி செய்யப்படும் ஐந்து மூலப்பொருட்கள் மீது விதிக்கப்பட்ட வரிகளை ரத்து செய்ய இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அத்துடன், இறக்குமதி செய்யப்படும் சானிட்டரி நாப்கின்களுக்கும் வரிச்சலுகை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் 10 சானிட்டரி நாப்கின்கள் கொண்ட ஒரு பேக்கின் விலை 50 முதல் 60 ரூபாய் வரை குறைக்கப்படும்.
ஒரு பேக்கின் அதிகபட்ச சில்லறை விலை 260 முதல் 270 ரூபாயாக இருக்கும். இதன்மூலம், சுகாதாரப் பொருட்களை வாங்க முடியாத பெண்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.