உலக வரலாற்றில் முதல்முறை... சானிட்டரி நாப்கின் இலவசம்! எங்கே?
பெண்களுக்கு சானிட்டரி பொருட்கள் இலவசமாக கிடைப்பதை உரிமையாக்கும் சட்டம், ஸ்காட்லாந்தில் அமலுக்கு வந்துள்ளது.
சானிட்டரி பொருட்கள்
ஐரேப்பிய நாடான ஸ்காட்லாந்தில், கவுன்சில், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் பெண்களுக்கு, மாதவிடாய் தொடர்புடைய நாப்கின் உள்ளிட்ட பொருட்கள் இலவசமாக கிடைப்பதை உறுதி செய்யும் வகையில்,
மாதவிடாய் பொருட்கள் உரிமை சட்டம் இயற்றப்பட்டது. இந்த புதிய சட்டம் அமலுக்கும் வந்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 27 மில்லியன் யூரோக்கள், பொது இடங்களில் சானிட்டரி பொருட்கள் கிடைக்க செலவிடப்பட்டு வருகிறது.
ஸ்காட்லாந்து- சட்டம்
அனைவருக்கும் சானிட்டரி பொருட்கள் இலவசமாக கிடைப்பதை உறுதி செய்ய சட்ட ரீதியாக அங்கீகாரம் கேட்டு லேபர் கட்சியை சேர்ந்த எம்.பி., மோனிகா லெனன் பிரசாரம் செய்து வந்த நிலையில், 2020 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில் எவ்வித எதிர்ப்பும் இன்றி நிறைவேறியது.
இது குறித்து எம்பி மோனிகா லெனன் கூறியதாவது, உள்ளூர் அதிகாரிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கடினமான உழைப்பால், சானிட்டரி பொருட்களை பெறுவதற்கான உரிமை சட்டம், அமலுக்கு வந்துள்ளது.
இது தொடர்ச்சியாக மாதவிடாய் கண்ணியத்தை வலியுறுத்தி பிரசாரம் செய்தவர்கள் சாதனையில் மற்றுமொரு மிகப்பெரிய மைல்கல் ஆகும். இது முற்போக்கு, துணிச்சலான அரசியல் தேர்வு என்கிற வித்தியாசத்தை காட்டுகிறது எனக் கூறினார்.