பள்ளி மாணவர்களுக்கு இலவச ஆணுறை - சர்ச்சையில் புதிய கல்வி கொள்கை! அதிர்ச்சியில் பெற்றோர்கள்!
அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள பள்ளிகளில் 5-ம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கு ஆணுறை வழங்கப்படும் என்று வெளியான அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சிகாகோவில் கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் அடுத்த மாதம் முதல் திறக்கப்படவுள்ளது. பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு ஃபேஸ்மாஸ்க், சானிடைசர், தெர்மாமீட்டர்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு கொண்டுவந்த புதிய கல்விக் கொள்கையின் படி பள்ளிகளில் 5-ம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கு ஆணுறை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிகாகோ பள்ளி கல்வித்துறை, பள்ளிகளில் 5-ம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கு இலவச ஆணுறைகள் மற்றும் சானிட்டரி பேட்களை வழங்க வேண்டும் என கடந்தாண்டு புதிய கொள்கையை விதித்தது.
இது பாலியல் கல்வியின் ஒரு பகுதி எனக் கூறப்படுகிறது. எச்.ஐ.வி தொற்று மற்றும் மாணவர்களிடையே எதிர்பாராத கர்ப்பம் உள்ளிட்டவற்றை தடுப்பதற்காகவும் பாலியல் நோய்கள் பரவுவதை தடுக்கும் விதமாகவும் சிகாகோ பொது சுகாதாரத்துறையால் ஆணுறைகள் வழங்கப்படுகின்றன என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்புக்கு பள்ளியில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களும் கடுமையாக
தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.