மது குடிக்கச் சென்ற 55 வயது பெண் - போதையில் 19 வயது இளைஞர் வெறிச்செயல்!
55 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண் கொலை
கர்நாடகா மாநிலம், ராய்ச்சூர் மாவட்டத்தை சேர்ந்த 55 வயது பெண் ஒருவர் கடந்த 2-ம் தேதி இரவு வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். பின்னர் அந்த பெண் வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் அந்த பெண் நிர்வாண நிலையில், பலத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதனையடுத்து நடைபெற்ற பிரேத பரிசோதனையில் அந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்திருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
குற்றவாளி கைது
அதில், அப்பகுதியில் உள்ள மதுபான கடைக்குள் அந்த பெண் செல்வதும், பின்னர் அந்த பெண் வெளியே வரும் போது ஒரு இளைஞர் அவரை பின்தொடர்ந்து வருவதும் பதிவாகியிருந்தது.
மேலும், அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த கரண் (19) என்ற இளைஞர் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து குற்றவாளியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், "கடந்த 2-ம் தேதி மதுபான கடையில் கரண் மது குடித்துள்ளார்.
அப்போது அந்த பெண்ணும் கடைக்கு வந்து மது அருந்தியுள்ளார். பின்னர் அந்த பெண் வெளியே வந்து வீட்டுக்கு திரும்பியுள்ளார். அப்போது கரண், அப்பெண்ணை கட்டிடத்திற்குள் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், அந்த பெண்ணை கழுத்தை நெரித்தும், அடித்தும் கொடூரமாக கொலை செய்துள்ளார்" என்பது தெரியவந்தது.