காணாமல் போன பாஜக பெண் நிர்வாகி - கணவரை விசாரித்ததில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள் !
பாஜக பெண் நிர்வாகியை கணவர் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மனைவி கொலை
மகாராஷ்டிரா மாநிலம் பாஜக சிறுமான்மையினர் பிரிவு தலைவராக இருந்தவர் சனா கான் (34). நாகபூரில் தனது பெற்றோருடன் வசித்து வந்த இவர் ஜபல்பூரில் வசிக்கும் தனது கணவர் அமித் சாகுவை பார்ப்பதற்காக தனியாக புறப்பட்டு சென்றார். இரண்டு நாட்களில் தான் திரும்பி வந்து விடுவதாக வீட்டில் சொல்லியிருக்கிறார் சனா கான்.
ஆனால் ஒரு வாரத்திற்கு மேலாகியும் அவர் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் ஜபல்பூர் சென்று சனா கானை தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சனா கானின் கணவர் அமித் சாகுவை பிடித்து விசாரணை செய்துள்ளனர்.
அப்போது சனா கானை கொலை செய்த்ததாக கணவர் ஒப்புக்கொண்டுள்ளார். நீண்டகாலமாக இவர்களுக்கு இடையில் இடையில் பண பிரச்சனை இருந்து வந்துள்ளது. சனாகான் ஜபல்பூர் வந்த போது இவர்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
கணவர் கைது
ஒரு கட்டத்தில் சனா கானை கடுமையாக தாக்கியுள்ளார் அமித் சாகு. இதில் சனா கான் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இதனையடுத்து சனா கானின் உடலை ஜபல்பூரில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹிரண் ஆற்றில் வீசியதாக கணவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் போலீசார் அந்த ஆற்றில் சனா கானின் உடலை தேடி வருகின்றனர். இந்த கொலைக்கு உதவிய அமித் சகுவின் நண்பர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.