பள்ளிக்குள் முகமூடி நபர்கள் செய்த காரியம்.. அஞ்சி நடுங்கிய 532 மாணவர்கள் ஆப்சென்ட் - என்ன நடந்தது?
முகமூடி போட்ட நபர்கள் செய்த காரியத்தால் மாணவர்கள் பள்ளிக்கு வர மறுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முகமூடி நபர்கள்
அமெரிக்க நாட்டின் வாஷிங்டன் நகரில் உள்ளது ஆபர்ன் ரிவர்சைடு உயர்நிலை பள்ளி. இங்கு கடந்த திங்கட்கிழமை மதியம் 6 முகமூடி அணிந்த நபர்கள் திடீரென பள்ளிக்குள் நுழைந்தனர். அவர்கள் வேக வேகமாக அப்பள்ளியின் பல இடங்களுக்கு ஓடி, பல பள்ளி மாணவர்களை தாக்க தொடங்கினர்.
அதில் 4 மாணவர்களை கீழே தள்ளினர், ஒருவரின் முகத்தில் குத்து விட்டனர். இதனால் மற்ற மாணவர்கள் அஞ்சி ஓடினர். இதை கண்ட பள்ளி நிர்வாகத்தினர் அந்த முகமூடி மனிதர்களை துரத்த தொடங்கினர், அப்பொழுது அவர்கள் ஓடிவிட்டனர். அவர்கள் சென்றதும் பள்ளியின் அணைத்து கதவுகளும் அடைக்கப்பட்டு வகுப்புகள் நடந்தது.
தாக்கம்
இந்நிலையில், பள்ளியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இந்த சம்பவம் மாணவர்கள் மற்றும் மாணவிகளிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய்கிழமையிலிருந்து மொத்தம் 532 மாணவ மாணவியர் பள்ளியிலிருந்து விடுப்பில் உள்ளதாக அம்மாவட்ட கல்வி துறை அறிவித்துள்ளது.
மாணவர்களின் பெற்றோர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப அச்சப்படுகின்றனர் என தெரிய வந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மாணவர்களின் அச்சத்தை போக்கும் வகையில் அந்த முகமூடிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க போவதாக அப்பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.