'Iron Man' சிறுவன் - இடது கை இல்லாமல் பிறந்தவருக்கு பொருத்தப்பட்ட பயோனிக் கை!

United States of America World Technology
By Jiyath May 26, 2024 03:36 AM GMT
Report

இடது கை இல்லாமல் பிறந்த சிறுவனுக்கு பயோனிக் கை பொருத்தப்பட்டுள்ளது.

பயோனிக் கை

அமெரிக்காவை சேர்ந்தவர் ஜோர்டான் என்ற 5 வயதான சிறுவன் பிறக்கும்போதே இடது கை இல்லாமல் பிறந்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுவனுக்கு பயோனிக் கை பொருத்தப்பட்டுள்ளது.

ஜோர்டானின் கோரிக்கையின்படி 'அயர்ன் மேன்' படத்தில் வரும் சிவப்பு மற்றும் தங்க நிறத்திலான பயோனிக் கை பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மிக இளம் வயதில் பயோனிக் கை பொருத்தப்பட்டவர் என்ற பெருமையையும்,

செவ்வாய் கிரகத்தில் நடமாடும் ஏலியன்கள்? திட்டம்போட்டு வேட்டைக்கு செல்லும் NASA!

செவ்வாய் கிரகத்தில் நடமாடும் ஏலியன்கள்? திட்டம்போட்டு வேட்டைக்கு செல்லும் NASA!

14 மணி நேரம் 

சூப்பர் ஹீரோ அந்தஸ்தையும் அந்த சிறுவன் பெற்றுள்ளார். ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரி மூலம் இயங்கு இந்த பயோனிக் கை, ஒருமுறை சார்ஜ் செய்தால் 14 மணி நேரம் இயங்கும்.

மேலும், ஜோர்டானுக்கு முன்பே இங்கிலாந்தைச் சேர்ந்த ஹாரி ஜோன்ஸ் (10) என்ற சிறுவனுக்கு கடந்த ஆண்டு 'அயர்ன் மேன்' பயோனிக் கை பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.