சிறுவனுக்கு கிடைத்த பொக்கிஷம்; தாய்க்கு அடித்த ஜாக்பாட் - 2000 ஆண்டுகள் பழமையானதாம்!
12 வயது சிறுவன் 2,000 ஆண்டுகள் பழமையான பொருகளை கண்டுபிடித்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
அறிய பொக்கிஷம்
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ரோவன் என்ற 12 வயது சிறுவன் தனது செல்லப்பிராணியாக நாயை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது மண்ணிலிருந்து ஒரு அறிய பொக்கிஷம் அந்த சிறுவனுக்கு கிடைத்துள்ளது.
இதனை சிறுவன் தனது தாயிடம் கொடுத்துள்ளார். ஆனால், அதை எதோ குப்பை என நினைத்து அவரது தாய் குப்பைத் தொட்டியில் வீச சென்றுள்ளார். அப்போதுதான் அது ஒரு விலைமதிப்பில்லாத பொருள் என்பதை அவர் உணர்ந்துள்ளார்.
தங்க வளையல்
அந்த பொருளை சோதனை செய்ததில், அது சுமார் 2,000 ஆண்டுகள் பழமையான ஒரு தங்க வளையல் என்பதும் கி.பி 1-ம் நூற்றாண்டை சேர்ந்தது என்பதும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து பேசிய சிறுவனின் தயார் "பூமியிலிருந்து ஏதாவது பொருட்களை கண்டுபிடிப்பதில் ரோவன் எப்போதுமே ஆர்வமாக இருப்பான். அவன் அப்படி நடந்துகொள்ளும்போது நான் கண்டிப்பேன். ஆனாலும் அவன் அந்த செயலை தொடர்ந்து செய்துகொண்டுதான் இருக்கிறான்” என்று தெரிவித்துள்ளார்.