ரயில் முன் பாய்ந்து 5 பெண்கள் தற்கொலை - தமிழகத்தில் பதறவைக்கும் சம்பவம்!
குழந்தைகள் உட்பட 5 பெண்கள் இரு வேறு சம்பவங்களில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளனர்.
5 பெண்கள் தற்கொலை
தஞ்சாவூர், கும்பகோணம் பாரத் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (42). கோவையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஆர்த்தி (40). தனியார் வங்கியில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இவர்களுக்கு ஆருத்ரா (11), சுபத்ரா (7) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். கணவன் மனைவி இருவருக்கும் அவ்வப்போது குடும்பத் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பாபநாசத்தில் தனது தோழியின் வளைகாப்பிற்கு செல்வதாக கூறிவிட்டு, இரண்டு மகள்களுடன் ஆர்த்தி வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்.
ஆனால், வீடு திரும்பவில்லை. இதனால் பதறிய ராஜேஷ், இதுகுறித்து போலீஸில் புகாரளித்தார். தொடர் விசாரணையில், உத்தாணி பகுதியில், கண்களை கட்டியபடி ரயில் முன் பாய்ந்து பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டனர். அது ஆர்த்தி, ஆருத்ரா, சுபத்ரா ஆகியோர் என்பது தெரியவந்தது.
தீவிர விசாரணை
இதற்கிடையில், திருவிடைமருதூர் கட்டளை தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி ரேவதி(50). மகள் மகேஸ்வரி(30) ஆகியோர் காணாமல் போனதாக புகாரளிக்கப்பட்டது. விசாரணையில், மயிலாடுதுறையில் இருந்து மைசூரு சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு பாய்ந்து இருவரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே நாளில் இவ்வாறு 5 பெண்கள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan
